கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்.
மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம் ரிஷிவந்தியம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது;
அரசு உத்தரவின்படி தற்போது பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு கல்லூரி முனைவர் வே.சண்முகம் தலைமை தாங்கினார். இந்த சிறப்பு முகாமில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மாணவர்களை ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்