ரிஷிவந்தியம் தொகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் பிரச்சாரம்

ரிஷிவந்தியம் தொகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பிரச்சாரம் மேற்கொண்டார்.;

Update: 2021-10-02 12:45 GMT
ரிஷிவந்தியம் தொகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் பிரச்சாரம்

வாணாபுரம் ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் பெருமாள் என்பவரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு.

  • whatsapp icon

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதியில் வரும் ௬ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட வாணாபுரம் ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் பெருமாள் என்பவரை ஆதரித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ரிஷிவந்தியம் தொகுதி திமுக கோட்டை என பெருமையோடு கூறிக் கொள்வதில் எனக்கு மன மகிழ்ச்சியைத் தருகின்றன.

பிரச்சாரத்தின் போது ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் கழக தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News