இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளிக்கூடம்

பிள்ளையார்பாளையம் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி கட்டிடம் ஆபத்தான நிலையில் இன்னும் இடிக்கப்படாமல் உள்ளது.;

Update: 2022-01-29 17:30 GMT

மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டிடம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி, மணலூர்பேட்டை அடுத்த பிள்ளையார்பாளையம் கிராமத்தில் உள்ள    நடுநிலைப் பள்ளி கட்டிடம் ஆபத்தான நிலையில் இன்னும் இடிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில்  வருகின்ற பிப்ரவரி மாதம் துவக்கத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்க இருப்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கட்டிடத்தின் நிலையை கண்டு அச்சமடைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு நலன் கருதி ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News