இப்ப விழுமோ.. எப்ப விழுமோ.. அரசு பள்ளி கட்டிடம் மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா
300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வரும் நிலையில் இந்தப் பாழடைந்த கட்டிடத்திற்கு மாணவர்கள் சென்று வருகின்றனர்;
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், அம்மகளத்தூர் என்ற கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மிகவும் பாழடைந்த அரசு பள்ளி கட்டிடம் அபாயகரமான நிலையில் இருப்பதால் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.
இந்தப் பள்ளியில் உள்ள இரண்டு பழைய கட்டிடங்கள் சிமெணட் காரைகள் பழைய கட்டிடங்கள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து போய் எப்பொழுது இடிந்து விழும் என்ற நிலையில் இருக்கிறது.அம்மகளத்தூர் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வரும் நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள இந்தப் பாழடைந்த கட்டிடத்திற்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். அபாயகரமான நிலையில் உள்ள இந்த பாழடைந்த பள்ளி கட்டிடம் மாணவர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தி வருகிறது.உடனடியாக இந்த பள்ளி வளாகத்தில் பாழடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் பள்ளிக் கல்வித் துறையினர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் இந்த பாழடைந்த கட்டிடங்களை இடித்து தள்ளி அப்புறப்படுத்தி மாணவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.