கள்ளக்குறிச்சியில் பொது இடத்தில் புகைபிடிப்பவர்களுக்கு அபராதம்
கள்ளக்குறிச்சியில் பொது இடத்தில் புகைபிடித்த பத்து பேருக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர்.;
பொது இடத்தில் புகைப்பிடித்தவர்களிடம் அபராதம் வசூலிக்கும் அதிகாரிகள்.
கள்ளக்குறிச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் பூங்கொடி உத்தரவின்பேரில், மேலூர் வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி முன்னிலையில் கோட்பா சட்டம் 2003 விதியின்படி நேற்று திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் மற்றும் நான்கு முனை சந்திப்பு ஆகிய பகுதிகளில் பொது இடங்களில் புகை பிடித்த நபர்கள் கண்டறியப்பட்டு, 10 பேருக்கு மொத்தம் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சுந்தர்பாபு, சுகாதார ஆய்வாளர்கள் கொளஞ்சியப்பன் சிவகாமி, விக்னேஷ்வரன் மற்றும் ஆலத்தூர் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் பணியாற்றினர்.