கள்ளக்குறிச்சியில் வேரோடு சாய்ந்த புளியமரம்; போக்குவரத்து பாதிப்பு
கள்ளக்குறிச்சியில் காற்றுடன் கூடிய மழைக்கு வேரோடு சாய்ந்த புளியமரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரித்திருந்தது. அதன்படி, கள்ளக்குறிச்சியில் இன்று காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏமப்பேர் பைபாஸ் அருகில் உள்ள புளிய மரம் தற்பொழுது அடித்த காற்றுடன் கூடிய மழை காரணமாக அடியோடு சாய்ந்து விழுந்தது.
இதனால், சாலையில் செல்லும் பொதுமக்களுக்கோ, வாகன ஒட்டிகளுக்கு எந்த அசாம்பாவிதமும் ஏற்படவில்லை. தகவறிந்து வந்த கள்ளக்குறிச்சி காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சேர்ந்து சாலையில் சாய்ந்து கிடக்கும் புளியமரத்தை அப்புறப்படுத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.