தியாகதுருகம் பகுதியில் 8000 ஏக்கர் உளுந்து சாகுபடி வீண்: விவசாயிகள் கவலை
தியாகதுருகம் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 8000 ஏக்கர் மானாவாரி நிலங்களில் உளுந்து சாகுபடி வீணாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 8000 ஏக்கர் மானாவாரி நிலங்களில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 20 நாட்களுக்கு முன் விதைப்பு பணிகளை முடித்தனர். தற்போது செடி முளைத்து வளரும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 10 தினங்களாக தொடர்ந்து இப்பகுதியில் மழை பெய்து வருவதால் உளுந்து சாகுபடி செய்த நிலத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், செடிகள் அழுகி வீணாகி வருகிறது.
கடந்த ஆண்டும் இதே போல் தொடர் மழை பெய்து உளுந்து மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்த ஆண்டும் உளுந்து மகசூல் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உளுந்து சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.