கள்ளக்குறிச்சி அருகே 400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு

கள்ளக்குறிச்சி அருகே மேல் சாத்தனூரில் 400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.;

Update: 2021-10-22 04:46 GMT

சாராய ஊறலை கொட்டி அழிக்கும் போலீசார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜியாவுல்ஹக்,  மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு காவல் ஆய்வாளர்  மூர்த்தி  தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கல்வராயன்மலை முழுவதும் அதிகாலை முதல் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.

அப்போது மேல் சாத்தனூர் என்ற இடத்தில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 2 சின்டக்ஸ் டேங்கில் சுமார் 400 லிட்டர் கண்டுப்பிடிக்கப்பட்டது. கள்ளச்சாராய ஊரல்கள் போலீசார் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.

மேலும், மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

Tags:    

Similar News