கள்ளகுறிச்சியில் உள்ளாட்சித்தேர்தல் தேர்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம்
கள்ளகுறிச்சியில்உள்ளாட்சித்தேர்தல் தேர்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் இன்று நடைபெற்றது;
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் உள்ளாட்சி தேர்தல் 2021ஐ முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான பி.என்.ஸ்ரீதர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மற்றும் தேர்தல் நடைபெறும் நாள் ஆகிய தேதிகளில் வெளியிட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை, வட்டம் ரிஷிவந்தியம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 10 மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 10 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 89 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உறுப்பினர்கள் 217 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 1608 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 06.10.21 அன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதில் 939 வாக்குச்சாவடி மையங்களில் 2,39,300ஆண் வாக்காளர்களும் 2,33,183 பெண் வாக்காளர்களும் மற்றும் 85 மூன்றாம் பாலினம் வாக்காளர்களும் என மொத்தம் 4,72,568 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். முதல் கட்ட வாக்குப்பதிவிற்கு 7,751 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் ,மற்றும் கல்வராயன் மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 9 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 91 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 125 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 1554 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு 09.10.21 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அதில் 950 வாக்குச்சாவடி மையங்களில் 2,44,541 ஆண் வாக்காளர்களும் 2,44,704 பெண் வாக்காளர்களும் மற்றும் 101 மூன்றாம் பாலின வாக்காளரும் என மொத்தம் 4,89,346 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர் .இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 7,773 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
மேலும் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணுவதற்கு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையம் என்ற விதத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 9 வாக்கு எண்ணிக்கை மையங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.மாநில தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறையில் படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாதிரி நன்னடத்தை விதிகளைப் பின்பற்றி 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளவும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி சேவை எண் 18004258510 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.