டிட்டோ ஜாக் பொறுப்பாளர்கள் தலைமை அதிகாரிகளுடன் சந்திப்பு..!
"தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோருடன் டிட்டோ ஜாக் பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.";
டிட்டோ ஜாக் சார்பாக நேற்று காலை தொடக்கக்கல்வி இயக்குநரை 11.30 மணியளவில் சந்தித்து கோரிக்கை சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. இயக்குநர் நரேஷ் அரசாணை 243 சம்பந்தமாக மிக விரைவில் முடிவெடுக்கப்படும் 15.10.2024 டெட் சம்பந்தாமான வழக்கு ஆசிரியருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் எனவும் மிக விரைவாக மாவட்ட முன்னுரிமை அடிப்படையில் இடைநிலை ஆசிரியருக்கு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியும், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவியும் வழங்க ஆவண செய்யப்படும் என கூறினார்.
மேலும் 5400 தொடக்க நிலை தலைமையாசிரியர்களுக்கு தணிக்கைத் தடை இருந்தால் நிவர்த்தி செய்யப்படும். அதற்கான தணிக்கையாளருடன் அமர்வுக்கு ஏற்பாடு செய்வதாக கூறினார். மேலும் நடுநிலை தலைமையாசிரியருக்கு pay production செய்ய வாய்ப்பும் வழிவகை செய்யவதாகவும் அரசாணை 162ன் படி செய்வதாக கூறியுள்ளார்.
B.Lit படித்த தலைமையாசிரியருக்கும் கல்வித்துறை செயலாளரிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று கூறினார். சுமார் ஒன்றரை மணி நேரம் விவாதித்து சனிக்கிழமை இதற்கான கூட்டம் பள்ளித் துறைச் செயலாளர் மற்றும் நிதித்துறைச் செயலாளர் ஆகியோருடன் நடைபெற உள்ள கூட்டத்தில் நல்ல முடிவு எட்டப்படும் எனவும் சந்திக்கும்போது கூறினார்.
கல்வித்துறைச் செயலாளர்டம் 3.30 மணியளவில் டிட்டோ ஜாக் சார்பில் சந்திக்கப்பட்டது. மேற்கண்ட தகவல் அனைத்தும் செயலாளரிடம் கூறியபோது நிச்சயமாக 243-ல் மாற்றம் வரும் என்றும் 15.10.2024 சாதகமாக வந்தவுடன் பதவி உயர்வு வழங்கப்படும் என மாவட்ட அளவில் முன்னுரிமை அளித்து பதவி உயர்வு வழங்க ஆவண செய்யப்படும் என கூறினார்.
மேலும் அதற்கான கூட்டம் விரைவில் கூட்டுகிறேன் எனவும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினார். 5400 மற்றும் B.lit பதவி உயர்வு சம்பந்தமாக அவர் கூறிய வண்ணம் தான் அனைத்து வட்டாரங்களிலும் பணிப்பதிவேடு சரிபார்க்கப்பட்டு ஆய்வு நடந்து வருவதாகவும் அதற்கான தீர்வு விரைவில் எட்டப்படும். தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் நிதித்துறைச் செயலாளர் பள்ளி கல்வி இயக்குநர் கூட்டம் வரும் சனிக்கிழமை கூட்டப்பட்டுள்ளதாகவும் மீண்டும். உங்களை அழைத்துப் பேசி நல்ல தீர்வை எட்டுவோம் என கனிவுடன் கூறியது சிறப்பு. விரைவில் இயக்குநர் அவர்கள் டிட்டோஜாக் அழைப்பதாக கூறினார்.
தகவல் - டிட்டோஜாக் பொறுப்பாளர்