உக்ரைன்- ரஷ்யா போரால் வெளிப்பட்ட இந்தியாவின் ராஜதந்திரம்

உக்ரைன்- ரஷ்யா போரில் இந்தியாவின் ராஜதந்திரமான செயல்பாடு அமெரிக்காவை பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளாக்கி விட்டது.

Update: 2022-03-23 12:11 GMT

மூன்று நாளில் முடிந்திருக்க வேண்டிய உக்ரைன் போர் முப்பது நாட்களை எட்டி உள்ளது. ரஷ்யா "நாலு குண்டை போட்டு மிரட்டி பணிய வைக்கலாம்" என நினைத்தது. ஆனால் உக்ரைனோ நமக்கு அமெரிக்க உட்பட நேட்டோ நாடுகள் துணைக்கு வரும் என நினைத்தது. இரண்டுமே தவறாகிப்போனது. தற்போது ரஷ்யா போர் முறையை மாற்றி இருக்கிறது

இந்த போரில் இந்தியாவின் ராஜதந்திரங்கள் நன்றாகவே வெளிப்பட்டு இருக்கின்றன. வாஜ்பாய் ஆட்சியின் அணுகுண்டு சோதனைக்கு பிறகு முறுக்கிக்கொண்டு திரிந்த அமெரிக்கா மெல்ல மெல்ல மன்மோகன் காலத்தில் நெருங்கி வந்தது.

இதுவரை தனது நெருங்கிய கூட்டாளியாக இருந்த பாகிஸ்தான் ஒரு டுபாக்கூர் என தெரிந்தவுடன் அந்த நாட்டை கழட்டி விட்டு, இந்தியாவுடன் தனது நெருக்கத்தை அதிகரித்தது. ஆப்கன் போருக்காக சுயநலத்துடன் பாக்.குடன் உறவாடிய அமெரிக்கா பிறகு சுத்தமாக கை கழுவியது.

"நாம இரண்டு பேரும் தான் உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள்"என இந்தியாவின் கையை இறுக்கி பிடித்தது அமெரிக்கா.

இந்த புதிய திரைக்கதையை விரும்பாத சீனா முத்துமணிமாலை திட்டத்தை இந்தியாவை சுற்றி அரங்கேற்றியது.

அமெரிக்காவை பொறுத்தவரை இந்தியாவின் மிகப்பெரிய சந்தை வளம், சீனாவிற்கு செக் வைப்பது, ரஷ்யா, சீனாவிற்கு அருகில் தமக்கு நிரந்தர கூட்டாளியை உருவாக்குவது என்ற மூன்று காரணங்களை அடிப்படையாக வைத்து இந்தியாவுடன் நட்பு பாராட்டியது.

இந்தியாவுடன் தனக்கு இருந்த நட்பு காரணமாக உக்ரைன் போரில் இந்தியா கடுமையாக ரஷ்யாவை எதிர்க்கும் என அமெரிக்கா எதிர்ப்பார்தது. ஆனால் ரஷ்யா விஷயத்தில் அமெரிக்கா மீது மண் அள்ளி போட்டது இந்தியா

அமெரிக்கா இந்தியா மீது கடுமையான கடுப்பில் பல்லை "நற நற"வென கடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த டுவிஸ்டை எதிர்ப்பார்க்காத சீனாவோ,"அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி நாங்கடா"என இந்தியாவை நினைத்து மனதுக்குள் பாடிக்கொண்டு இருக்கிறது

இந்தியாவின் இந்த முடிவால் மனம் மாறிய சீனா,"நாம ஏன் இந்தியாவை எதிர்த்துக்கிட்டு இலங்கைக்கு உதவி செய்யனும் என இலங்கைக்கு பெரிய அல்வா கொடுத்ததும் அல்லாமல், இதுவரை கொடுத்த காசை கேட்டு நெருக்குகிறது.''

இனி சீனாவை நம்பினால் கதைக்கு ஆகாது என நினைத்த இலங்கையோ,தனது நிதி அமைச்சர் பசிலை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. அவர், "ஜெயலலிதா அருகில் பவ்வியமாக அமரும் ஓபிஎஸ் போல" மோடி முன் அமர்ந்து இன்று உதவி வாங்கிக்கொண்டு போயிருக்கிறார் இலங்கை நிதி அமைச்சர் பசில்

"பெற்ற பிள்ளையை அரவணைக்கும் தாய் போல" ரஷ்யா,இந்தியாவிற்கு குறைந்த விலையில் பெட்ரோலிய பொருட்களை டாலருக்கு அல்லாமல் இந்திய ரூபாய்க்கே கொடுக்கப்போகிறது. இதைக்கண்ட சீனா என்னுடைய யுவானுக்கே பெட்ரோலை கொடு என சவுதியை கேட்கவும்,சவுதியும் தலையாட்டிவிட்டது

இந்தியாவும்,சீனாவும் எடுத்த இந்த முடிவால், "போற போக்க பார்த்தால் நம்ம டாலர் செல்லக்காசாகி விடுமோ"ஆட்டம் கண்டுள்ளது அமெரிக்கா!

சுற்றி வளைத்து பாருங்கள் உக்ரைன் போரால் அதிகம் பாதிப்புகளை தவிர்த்து ராஜதந்திரத்தின் மூலம் பலனடைந்தது இந்தியா. பாதிக்கப்பட்டது அமெரிக்கா.

Tags:    

Similar News