அகவிலைப்படி உயர்வு: முதல்வருக்கு அரசு ஊழியர்கள் நன்றி

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Update: 2023-10-28 10:52 GMT

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படியினை உயர்த்தி வழங்கியமைக்காக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 1.7.2023 முதல் 4 சதவிகித அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியமைக்காக பல்வேறு அரசு அலுவலர்கள் சங்கங்கள், அரசு பணியாளர்கள் சங்கங்கள், ஓட்டுநர் சங்கங்கள், தொழிலாளர்கள் சங்கங்கள், போக்குவரத்து கழக சங்கங்கள், செவிலியர் சங்கம் மற்றும் பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை ஏற்று தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 1.7.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் கடந்த 25.10.2023 அன்று உத்தரவிட்டார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நான்கு சதவிகித அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியமைக்காக, தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு தலைமைச் செயலக ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., ஹிந்த் மஸ்தூர் சபா, தொழிலாளர் விடுதலை முன்னணி, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி, TNCSC எம்ப்ளாயீஸ் யூனியன், தமிழ்நாடு மின் கழகம், மாநகர் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்; ஆசிரியர்கள் சங்கங்களை சார்ந்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மன்றம், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழில்கல்வி ஆசிரியர் சங்கம், நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் (தியோடர் ராபின்சன் பிரிவு), தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர் கழகம், தமிழ்நாடு கல்வித்துறை அரசு அலுவலர் சங்கம், தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்றம், டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம், நர்சுகள் பொது நலச்சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறை பணியாளர்கள் சங்கம், JSR தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 1.7.2023 முதல் 4 சதவிகித அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியமைக்காக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின்போது போக்குவரத்துத் துறை அமைச்சர்  எஸ்.எஸ். சிவசங்கர், நிதித்துறை முதன்மைச் உதயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News