போனஸ்ன்னா என்னங்க..? தீபாவளி வருதுங்க..வாங்க பார்ப்போம்..!
போனஸ்..போனஸ்னு சொல்றாங்களே. அது என்னன்னு சிந்தித்து பார்த்து இருக்கீங்களா? இப்ப பாருங்க.;
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திற்கு முன்பு பணியாளர்களுக்கு வார சம்பள நடைமுறையே இருந்து வந்தது. அப்படி கணக்குப்பார்த்தால் ஆண்டுக்கு 52 வாரங்கள் தொழிலாளர்கள் சம்பளம் பெற்று வந்தனர்.
ஆனால், பிரிட்டிஷார் மாத சம்பள நடைமுறையை கொண்டு வந்தனர். ஆண்டுக்கு 12 மாதங்கள். வாரக்கணக்கில் கொண்டால் 48 வாரங்கள் மட்டுமே கணக்கில் வந்தது. ஆக, ஒரு மாத சம்பளம் மிஸ்ஸிங்.
விடுவார்களா நம்மவர்கள்? மஹாராஷ்டிராவில் உள்ள தொழிற்சங்கங்கள் அந்த ஒரு மாத சம்பளத்தை வழங்காமல் பிரிட்டிஷார் தொழிலாளர்களை ஏமாற்றுவதாக 1930 முதல் 1940 வரையிலான 10 ஆண்டுகள் போராடினார்கள். இறுதியாக பிரிட்டிஷார் இறங்கி வந்தனர். தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தனர்.
அதன்படி ஒரு மாத சம்பளத்தை எப்படி வழங்குவது என்ற பேச்சுவார்த்தையில் தீபாவளி,தசரா போன்ற பண்டிகை காலங்களில் இந்த ஒரு மாத கூடுதல் சம்பளத்தை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதுவே போனஸ் ஆனது. பின்ன என்னங்க நீங்களே கணக்குப்போட்டுப் பாருங்க. ஒரு மாச சம்பளங்க..இப்போ போனஸ். ஒகேவாங்க.