தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

Update: 2022-05-29 12:22 GMT

பைல் படம்.

தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சென்னை மாநகராட்சியின் தெற்கு மண்டல துணை ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் கலான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கூடுதல் செயலாளராக விஜயலட்சுமியும், கூட்டுறவு சங்கங்கங்களின் கூடுதல் பதிவாளராக சங்கர் ஐஏஎஸ்-ம் நிமிக்கப்பட்டுள்ளனர்.

சமூக நலன், மகளிர் உரிமைத்துறை கூடுதல் இயக்குநராக கார்த்திகாவும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநராக ராஜகோபால் கங்கராவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழகத்தில் 6 மாநகராட்சி ஆணையர் பதவிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி கோவை மாநகராட்சி ஆணையராக பிரதாப் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்தார்.

அதேபோல் மதுரை மாநகராட்சி ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் கஹ்லோனும், திருச்சி மாநகராட்சி ஆணையராக வைத்தியநாதன்,  திருநெல்வேலி கார்ப்பரேஷன் கமிஷனராக சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும் நாகர்கோவில் மாநகராட்சிஆணையராக ஆனந்த் மோகன், ஆவடி மாநகராட்சி ஆணையராக தர்பகராஜ் ஆகியோரை  நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

Tags:    

Similar News