இன்று குன்னூர் அருகே விபத்துக்குள்ளான IAF Mi-17V5 ஹெலிகாப்டர் பற்றி தெரியுமா?

நீலகிரி மாவட்டம்,குன்னூர் அருகே ராணுவ தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.அந்த ஹெலிகாப்டர் பற்றிய விபரத்தொகுப்பு.

Update: 2021-12-08 10:43 GMT

IAF MI-௧௭வ்௫ மாடல் ஹெலிகாப்டர். மாதிரி படம் 

  • இராணுவ பயன்பாடுகளில் Mi-17V-5 என்ற இந்த ஹெலிகாப்டர் எந்த புவியியல் நிலையிலும், பாதகமான தட்பவெப்ப நிலைகளிலும் கூட இயங்கக்கூடிய அதிநவீன ஹெலிகாப்டர் என்று கூறப்படுகிறது.
  • ரஷ்ய தயாரிப்பான இந்த ஹெலிகாப்டர் இராணுவ பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டது. இது பணியாளர்கள், சரக்கு மற்றும் உபகரணங்களை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • இதன் வெளிப்புறத்தில் external sling பொருத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த ஹெலிகாப்டர் மூலம் வெளியிலும் சரக்குகளை கொண்டு செல்ல முடியும்.

  • சூழ்நிலைக்கு ஏற்ப காற்றில் மிதந்தவாறே, தரையில் உள்ள இலக்குகளை துல்லியமாக அழிக்கும் திறன் பெற்றது. மேலும் காயமடைந்தவர்களைச் சுமந்து செல்வதில் துரிதமாக செயல்படும்.
  • இந்த ஹெலிகாப்டர்  ராக்கெட்டுகள், பீரங்கிகள் மற்றும் சிறிய ரக ஆயுதங்கள் போன்றவைகளை சுமந்து செல்லும்.
  • இதை இரவும்,பகலும் இயக்கலாம். ஒரு கனமான கவச பாதுகாப்பு பொருத்தப்பட்டிருக்கும். அதனால் ஹெலிகாப்டரை அதிக உயரத்திலும், வெப்பமான நிலையிலும் கூட இயக்க முடியும். செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பைப் பெற்று இருப்பதால் இலக்கு அணுகுமுறையில் இது அதிக துல்லியமானதாக கருதப்படுகிறது.

  • Mi-17V-5, Mi-8/17 - வகை ஹெலிகாப்டர்களில் தொழில்நுட்ப ரீதியாக இது மேம்பட்ட ஒன்றாகும்.

 2008-ம் ஆண்டில்  ரஷ்யாவின் Rosoboronexport நிறுவனம், இந்தியாவுடன் 80 Mi-17V-5 மாடல்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 

இப்படி பல மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து நாடே கவலைகொண்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். உயர்மட்ட விசாரணை நடக்குமென்று தெரிகிறது.

Tags:    

Similar News