பான் கார்டுடன் ஆதார் கார்டை இன்னும் இணைக்கலியா..? அபராதம் இரட்டிப்பாகுதுங்க..!

How To Link Aadhaar With Pan Card Online in Tamil-பான் கார்டுடன் ஆதார் கார்டை இன்னும் இணைக்கலியா..? எப்படி இணைக்கலாம் என்று பாருங்கள்.;

Update: 2022-07-12 08:38 GMT

how to link aadhaar with pan card online in tamil-பான் கார்டு ஆதார் கார்டு இணைப்பு.

How To Link Aadhaar With Pan Card Online in Tamil-PAN எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்பது பல மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருமுறையும் குறிப்பிட்ட காலக்கெடு அளித்த மத்திய அரசு ஜூன் 30ம் தேதியை இறுதியாக்கியுள்ளது. அந்த காலகட்டத்தில் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், பான் கார்டு செயலிழந்து போகலாம்.

ஆதார் எண் இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் செல்லாத பான் கார்டாக அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் CBDTஅறிவித்தது. ஆனால், மார்ச் 2022 மாதத்துக்குள் பலரும் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்காமல் இருந்ததால், காலக்கெடு மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அதாவது, மார்ச் 31 2023 வரை ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணை இணைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பான்-ஆதார் இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் CBDT மார்ச் மாத இறுதியில் அறிக்கை வெளியிட்டது.

2022, ஜூன் 30,ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்கவில்லை என்றால், வருமான வரிச் சட்டம், 272N பிரிவின் படி நீங்கள் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். ஜூலை 1 ம் தேதிக்கு பின்னர் அபராதத் தொகை ரூ. 1000 என்று அதிகரிப்பட்டுள்ளது.

SMS மூலம் எவ்வாறு இணைப்பது ?

ஆதார் எண் பான் எண் ஆகியவற்றை இணைக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று எஸ்எம்எஸ் மூலம் இணைத்துக் கொள்ளலாம். 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைக்கலாம்.

ஓகே எப்படி இணைப்பது என்று பார்ப்போம். மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து மேற்கூறிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் மூலம் எவ்வாறு இணைப்பது?

http://incometaxindiafiling.gov.in./ என்ற வருமான வரித்துறையின் வலைதளம் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைக்கலாம்.

1) முதலில் ஆன்லைன் வழியாக வருமான வரித்துறையின் வலைதளத்திற்கு செல்ல வேண்டும்.

2) அடுத்து வலைதளத்தில் இடது பக்கத்தில் உள்ள ஆதார் லிங்க் என்ற ஆப்சனை கிளிக் செய்யவேண்டும்.3) அதன் பின்பு உங்களின் பான் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கும். அதில் உங்கள் பெயரினை தவறின்றி பதிவிட வேண்டும்.

4) அடுத்ததாக உங்கள் பிறந்த தேதி உள்ள ஒரு சிறிய டிக் பாக்ஸ் இருக்கும் அதனை 'க்ளிக்' செய்ய வேண்டும்.

5) பின்னர் அங்குள்ள captcha எண்ணை பதிவு செய்து 'க்ளிக்' செய்தால், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி (one time password ) வரும். அதை பதிவு செய்த பின்னர் கடைசியாக லிங்க் ஆதார் என்பதை 'க்ளிக்' செய்ய வேண்டும். உங்கள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுவிடும்.

நேரிலும் இணைக்கலாம் :

ஆன்லைனிலோ அல்லது SMS மூலமாகவே இணைக்க முடியவில்லை என்றால் நேரில் சென்றும் இணைக்கலாம். இதற்காக இ.சேவை மையத்திற்கு சென்று Annexure-I நிரப்பி, அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்துக் கொடுக்க வேண்டும். அதாவது பான் அட்டை மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களையும் கொடுக்க வேண்டும். இதற்கு கட்டணம் உண்டு.

Tags:    

Similar News