வாட்ஸ்ஆப் மூலம் நொடியில் தடுப்பூசி சான்றிதழ் பெறுவது எப்படி? சபரிமலைக்கு 'ஈஸி'

வாட்ஸ்ஆப் செயலி மூலம் நொடியில் தடுப்பூசி சான்றிதழ் பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.;

Update: 2021-11-27 04:52 GMT

பைல் படம்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டங்களாக பொதுமக்களுக்கு அரசு தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது.

முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசி செலுத்தியவர்கள் தங்களது சான்றிதழை மத்திய அரசின் https://www.cowin.gov.in/ என்ற இணையதள முகவரியில் சென்று பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

தற்போது சபரிமலை சீசன் தொடங்கிய நிலையில், பக்தர்கள் அனைவரும் கொரோனா இல்லா சான்றிதழ் அல்லது இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், துரிதமாக தங்களது மொபைலில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியில் டைப்செய்தால் போதும் தடுப்பூசி சான்றிதழ் நொடியில் வந்துவிடும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் சபரிமலை பக்தர்களுக்கு இந்த வசதி மிகவும் வசதியாக அமைந்துள்ளது.

செயல்படுத்தும் முறை:


உங்களுடைய வாட்ஸ்ஆப் செயலியில் 90131 51515  என்ற எண்ணை இணைக்க வேண்டும். பின்னர் இணைத்துள்ள இந்த எண்ணிற்கு 'Certificate' என டைப் செய்து அனுப்ப வேண்டும். 

இதனையடுத்து தங்களது மொபைல் எண்ணிற்கு 6 இலக்க 'OTP' குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். இதனை வாட்ஸ்ஆப் உள்ள அந்த எண்ணிற்கு ஓடிபி-யை டைப் செய்து அனுப்ப வேண்டும். 

இதனைத்தொடர்ந்து உங்களுடைய தொலைபேசி எண்ணில் எத்தனை பேர் குடும்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களோ அவர்களது பெயர்கள் 1, 2, என வரிசைப்படுத்தி தகவல் வரும். 

பின்னர் வரிசை எண்ணில் யாருக்கு சான்றிதழ் வேண்டுமோ அவர்களது வரிசை எண்ணை டைப் செய்ய வேண்டும். அடுத்த நொடியில் உங்களது தடுப்பூசி சான்றிதழ் PDF-ஆக வந்து விடும்.

இதுபோன்ற மக்களுக்கு பயனளிக்கும் விதமான செய்திகள் மற்றும் வீடியோக்களை காண www.instanews.city/ என்ற இணையதளத்திலும், InstaNewsCity என்ற யூடியூப் சேனலிலும் பார்த்து பயனடையலாம்.

Tags:    

Similar News