உக்ரைனில் உள்ள தமிழர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிப்பு
உக்ரைன் மீது ரஷ்யா தீவிரமான போரை தொடங்கியுள்ள நிலையில், உக்ரைன் தமிழர்களுக்கான உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.;
அதன்படி, உக்ரைனில் உள்ள தமிழகர்கள் உதவி தேவைப்படுவோர், 044 - 2851 5288, 9600023645, 99402 5644 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இதுதவிர, www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, உக்ரைனில் உள்ள தமிழர்கள், உதவி கோரலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உக்ரைனில் இந்தியர்கள், குறிப்பாக தமிழக மாணவர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.