அரசு ஊழியர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்...!
அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் நான்கு மாத DA-வும் சேர்த்து வழங்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு கடந்த ஜூலை மாதம் முதல் வழங்கப்படுகிறது. இது வழக்கமான உயர்வு தான் என்றாலும், இந்த மாதம் தீபாவளி வருவதால் சம்பளம் 28ம் தேதியே அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். சம்பளத்துடன் நான்கு மாத DA- நிலுவையும் சேர்த்து வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி பார்க்கலாம்:
1. அக்டோபருக்கான DA-ஆனது அக்டோபர் மாத ஊதியப் பட்டியலில் புதுப்பிக்கப்படும்.
2. மூன்று மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் (ஜூலை - செப்,24) அக்டோபர் மாத ஊதியப் பட்டியலில் கணக்கிடப்பட்டு இணைக்கப்படும் (GO எண்.192 T&A DT 31.05.24)
3. இந்த மாத ஊதியத்துடன் தான் மூன்று மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை சேர்த்து வழங்கப்படும்.
4. தனியாக DA நிலுவை தொகை ஏறாது சம்பளத்துடன் தான் நிலுவை தொகை ஏறும். சம்பளம் போட்டவுடன் அரசு ஊழியர்கள் தங்களது வங்கி கணக்கினை பரிசோதித்து எவ்வளவு கூடுதல் கிடைத்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.