பணிக் கொடை ரூ. 25 லட்சம் யாருக்கு கிடைக்கும்?

தமிழக அரசு அறிவித்த பணிக்கொடை 20 லட்சம் ரூபாய் குறிப்பிட்ட தகுதி வாய்ந்த அதிகாரிகள் வர்க்கத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

Update: 2024-09-18 00:36 GMT

செய்திக்கான கோப்பு படம் 

பணிக் கொடை குறித்து  அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

வீட்டு வாடகைப் படி, மருத்துவப்படி, பயணப்படி, மாற்றுத் திறனாளி ஊர்திப் படி முன்பணம், பணிக் கொடை உட்பட அனைத்து வகையான படிகளையும் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 25% உயர்த்தி வழங்கி வருகிறது.

அதனடிப்படையில் பணிக் கொடை உச்சவரம்பு ரூ 20 லட்சம் என்பதை ரூ. 25 லட்சமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. மத்திய அரசை பின்பற்றி தமிழக அரசும் பணிக் கொடை உச்ச வரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்தி உள்ளது.

பணிக் கொடை ரூ. 25 லட்சம் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கிடைக்குமா? கிடைக்காது. குறிப்பாக, Group D & C ஊழியர்களுக்கு கிடைக்காது. ஓய்வு பெறும் நாளில் அடிப்படை ஊதியம் ரூ 82,000/- க்கு மேல் அடிப்படை ஊதியம் பெற்று முழு கால அளவு பணி புரிந்தவர்களுக்கு மட்டுமே பணி கொடை ரூ. 25 லட்சம் கிடைக்கும்.

பொதுவாக பணிக்கொடை ரூ 25 லட்சம் DRO, RDO, DD, JD, AD, DE, CEO போன்ற மாவட்ட அளவிலான உயர் அலுவலர்களுக்கு கிடைக்கும். மத்திய அரசைப் பின்பற்றி பணிக் கொடையை 25% உயர்த்தி ரூ 25 லட்சமாக அறிவித்த தமிழக அரசு, அதே பார்வையில்..வீட்டு வாடகைப் படி, மருத்துவப்படி, பயணப்படி, மாற்றுத் திறனாளி ஊர்திப் படி, முன்பணத் தொகையை 25% உயர்த்தி அறிவித்திருக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags:    

Similar News