தென் இந்தியாவில் முதன்முறையாக பிராணிகளுக்கான எரிவாயு தகன மேடை

தென் இந்தியாவில் முதன்முறையாக கிண்டியில் செல்ல பிராணிகளுக்கான எரிவாயு தகன மேடை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி திறந்து வைத்தார்.

Update: 2021-10-30 17:00 GMT

எரிவாயு மேடையை திறந்து வைத்த சென்னை மாநகராட்சி கமிஷனர் கக்கன்சிங் பேடி.

சென்னை கிண்டியில் உள்ள புளூ கிராஸ் அமைப்பு சார்பில் தென் இந்தியாவிலேயே முதன் முறையாக ரூ. 57 லட்சம் செலவில் செல்ல பிராணிகள் மற்றும் கால் நடைகளுக்கான எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. எரிவாயு தகன மேடையை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை வில்லிங்டன் நிறுவன தலைவர் எல்.கணேசன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் எரிவாயு தகன மேடையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதில் இந்திய புளூ கிராஸ் தலைவர் சின்னி கிருஷ்ணன், பொது மேலாளர் டான் வில்லியம்ஸ் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

பின்னர் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: செல்ல பிராணிகள், கால் நடைகளுக்காக சென்னையில் முதன் முறையாக தகன மேடை அமைத்து இருப்பது நல்ல விசயம். சென்னை மாநகராட்சி சார்பில் உள்ள கால்நடை மருத்துவமனைகள் மேம்படுத்திடவும், தண்டையார்பேட்டையில் கால்நடைகளுக்கான தகன மேடை அமைக்கப்படும். கால் நடைகளை விரும்புகிறவர்களுக்காக இறுதி சடங்குகளை செய்ய மாநகராட்சிக்கு தன்னார்வ அமைப்பான புளூ கிராஸ் உதவியாக இருப்பது மகிழ்ச்சி என தெரிவித்தார்.

Tags:    

Similar News