தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

தஞ்சையிலுள்ள தொழில் நெறி வழிகாட்டி மைய தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் போட்டித்தேர்வு எழுவோருக்கு பயிற்சி அளிக்கப்படும்;

Update: 2023-06-15 13:00 GMT

தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம்  மூலமாக போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன.

தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNUSRB) காவல்துறையில் காலியாக உள்ள 750 சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை , தமிழ்நாடு சிறப்பு காவல்) மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் காலிப்பணியிடங் களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான கல்வித் தகுதி ஏதேனும் ஒர் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 01.07.2023 அன்று 20வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.இத்தேர்விற்கு 01.06.2023 முதல்30.06.2023 வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வானது ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மேற்கண்ட சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. அடுத்ததாக காவலர் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்படும் நிலையில், அத்தேர்விற்கான பயிற்சியும் ஒருங்கிணைந்த  நடத்தப்படுகிறது. மேலும் ஏற்கெனவே பயிற்சி பெற்ற மாணவர்கள் தயாராகும் வகையில் தனித்தேர்வு பயிற்சி வகுப்புகள் (Testbatch) தனியே 19.06.2023 முதல் நடத்தப்பட உள்ளது.

எனவே, இப்பயிற்சி வகுப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை பணிக்குத் தயாராகும் இளைஞர்கள் பயிற்சி வகுப்பின் பெயர், தங்களது பெயர் மற்றும் கல்வித் தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே போட்டித் தேர்வெழுதும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்புக்கு அலுவலக தொலைப்பேசி எண் 04362-237037.

Tags:    

Similar News