பம்பையில் வெள்ளப்பெருக்கு: சபரிமலை வர பக்தர்களுக்கு தடைவிதிப்பு
கேரளாவின் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பம்பை ஆற்றில், கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, சபரிமலை பக்தர்கள் மழை குறைந்த பின்னர் கோயிலுக்கு வரலாம். இன்று வர வேண்டாம் என, பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்த பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: பத்தினம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பம்பை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கல்கி அணையில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் இன்று முதல், வெள்ளம் வடியும் வரை, சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்த பின்னர் பக்தர்கள் வரலாம் என கூறப்பட்டுள்ளது.