அசானி புயல்: சென்னையிலிருந்து 10 விமானங்கள் ரத்து

அசானி புயல் காரணமாக சென்னையிலிருந்து 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது;

Update: 2022-05-10 06:48 GMT

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள அசானி புயல்,  தீவிர புயலாக உருமாறியுள்ளது. ஆந்திராவில் காக்கிநாடாவில் இருந்து தென்கிழக்கில் 130 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கும் இந்த புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு வடக்கு ஆந்திரா ஒடிசா கடற்கரையை ஒட்டி சென்றடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஒடிசாவில் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், வட தமிழகம் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

இந்நிலையில் அசானி புயல் எச்சரிக்கை காரணமாக  சென்னையில் இருந்து ஐதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News