மாற்றங்களுக்குப் பின் அமைச்சர்களின் முதல் கூட்டம்..!

தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட பின்னர் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2024-10-02 09:35 GMT

முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் 

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். கூடவே புதிய அமைச்சர்களாக பனமரத்துப்பட்டி ஆர்.ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, சா.மு.நாசர் மற்றும் கோவி.செழியன் ஆகியோர் கடந்த 29ம் தேதி அன்று பதவியேற்றுக் கொண்டனர். ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சரவையில் இருந்த ஆறு அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்ட நிலையில், மூன்று அமைச்சர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

இந்த நிலையில், அமைச்சரவை கூட்டம் வருகிற 8ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நவம்பர் மாதத்தில் நடக்கவுள்ள தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News