முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் வசூலிக்கப்படும்
முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் வசூலிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரிப்பன் மாளிகையில் துணை மற்றும் இணை ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தி நடத்தினர் இதில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுப்பது, தடுப்பூசி செலுத்துவது அதிகப்படுத்துவது, மருத்துவ கட்டமைப்பு குறித்து ஆலோசனை நடைபெற்றது
அதன்பின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், உலகம் முழுவதும் டெல்டா, ஓமிக்ரான் சேர்ந்து அதி வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது.
எனவே மாநில அளவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சருடன் காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தோம். தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அவை 4 - 5 நாட்களில் அமல்படுத்தப்படும். பூஜ்யம் நோக்கி தொற்று நகர்ந்து வந்த நிலையில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. இன்னும் அதிகமாகும் என அச்சம் உள்ளது.
சென்னை, செங்கல்பட்டில் தொற்று அதிகமாகி வரும் நிலையில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. 1000 கோவிட் தன்னார்வு பணியாளர்கள் நியமனம் செய்ய உள்ளோம். 200 வார்டுகளில் 1 வார்டுக்கு 5 பேர் செய்யவுள்ளோம். அவர்கள் சென்று யாருக்கு தொற்று, அவர்களின் தேவைகளை நிவர்தி செய்வார்கள். 15 மண்டலங்களில் Tele Counseling மையம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் குழுவாக அமர்ந்து ஆலோசனை வழங்குவார்கள்.
சென்னையில் பல்வேறு இடங்களில் கொரோனா சிறப்பு கவனிப்பு மையம் . 15 மண்டலங்களில் அமைக்கப்படும் கடந்த மே, ஜூன் மாதம் எங்கு எல்லாம் கொரோனா சிறப்பு மையம் இருந்தது அங்கெல்லாம் அமைக்கப்படும்.
அனைவரும் முககவசம் அவசியம் அணிய வேண்டும். 3 - 4 மடங்கு ஒமிக்ரான் வேகமாக பரவும் என்பதால் முக கவசம் கட்டாயம். முக கவசம் அணியவில்லை என்றால் அபராதம் வசூலிக்கப்படும்.
கடந்த அலையில் மாநகராட்சி சார்பில் கார் ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டுவரப்பட்டது போல் இப்பொழுது உடனடியாக 20 கார் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்படும். 25,000 வரை சென்னையில் பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனையை 30,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மழை கால சிறப்பு முகாம் ஒரே நாளில் 7000 முகாம் நடத்தியுள்ளோம். தொடர்சியாக அதை நடத்தி வருகிறோம். ஆன்லைன் போக வேண்டிய அவசியம் இல்லை தடுப்பூசி செலுத்தி கொள்ள. நாம் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறோம்
இரண்டாவது அலையில் ஆக்சிஜன் தேவை இருந்தது. தற்போது ஆக்சிஜன் 1400 மெட்ரிக் டன் கையிருப்பில் உள்ளது, கொரோனா சிறப்பு கண்காணிப்பு மையங்களில் ஆக்சிஜன் தேவைப்பட்டால் அதற்கு 1000 செறிவூட்டிகள் தயாராக உள்ளது
ஒமிக்ரான், டெல்டா என எந்த வகை கொரோனாவாக இருந்தாலும் ஒரே மாதிரியான சிகிச்சை தான் அளித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.