நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரபரப்பு பேட்டி

சென்னையில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.;

Update: 2021-12-04 13:30 GMT

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

அரசு போட்டித் தேர்வில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் ஆக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் இது குறித்து நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், கடந்த சட்டபேரவை கூட்ட தொடரில் மனிதவளம் மேலாண்மை துறை சார்பாக வழங்கிய பதில் உரை படி தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் ஆக்கப்பட்டு, அதில் 40% குறைந்தபட்சம் மதிப்பெண்கள் எடுத்தால் தான் தமிழ்நாடு அரசு பணிகளில் வேலை வழங்கப்படும். அதற்கு ஏற்ப தற்போது பல விவாதங்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் ஆலோசனை படி தெளிவாக அரசானை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணிகளில் எந்த தேர்வுகளாக இருந்தாலும், எந்த போர்டாக இருந்தாலும் சரி (டி.என்.பிசி, வனத்துறை சார்ந்த தேர்வு...என அனைத்திலும்) முதல் அடிப்படை தேவை தமிழ் புலமை. தமிழ்நாடு பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அதில் 40% மதிப்பெண் பெற வேண்டும் அப்படி இருந்தால் தான் மற்ற பேப்பர் மதிப்பெண்கள் கிரேடிங்கு எடுத்து கொள்ளப்படும். இதே போல் குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளில் முன்னர் இருந்த ஆங்கிலம் தாள் நீக்கப்பட்டு தமிழ் தாள் வைக்கப்படும். இதிலும் 40% மதிப்பெண் பெற வேண்டும்.

முக்கிய நோக்கம் என்னவென்றால் தமிழ் அரசு பணியில் அமர்பவர்கள், தினமும் தமிழ்நாடு மக்களை அணுக கூடியவர்கள் 10 ஆம் வகுப்பில் தமிழில் 40% மதிப்பெண் இல்லையென்றால் அந்த பொறுப்பிற்கு பொருந்தாது. இதை செயல்படுத்தும் விதமாக தத்துவம் அடிப்படையில் முதலமைச்சர் குறிக்கோள் ஒவ்வொரு துறைக்கும் வைப்பார் அதை அமைச்சர்கள் செயல்படுத்துவார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்தஅமைச்சர், இந்த துறையில் பல வழக்குகள் தொடர்ப்பட்டுள்ளது. எங்களை பொறுத்தவரை அடிப்படையில் இந்த சிஸ்டமில் மாற்றம் தேவை இருக்கு. அடிப்படை மாற்றத்திற்கு தற்போது நேரம்.

தமிழ்நாடு அரசு பணியில் 14 - 16 லடசம் இடங்கள் உள்ளது. பணியாளர்கள் 9 லட்சம். அதிக காலி இடம் உள்ளது. இதை ஏற்று கொள்ள நம்மிடம் நிதி இருக்கா என்றால் இல்லை. அது இரண்டாவது பிரச்சனை. முதலில் ஒட்டுமொத்த தேர்வு சிஸ்டம் மூலம் சிறந்த வெளிப்பாடு என்றால் 10,000 பேர் வந்துள்ளனர். எல்லா துறையிலும் அதை விட அதிகமாக தேவை இருக்கு. என்னுடைய நம்பிக்கை சில வாரங்களில் காலண்டர் வரும். 70, 80 வகை தேர்வு நாம் நடத்துகிறோம்..அது தேவையா?. தற்போதைய சூழலுக்கு இந்த மாடல் சரி செய்யப்பட வேண்டும். ஆலோசனை செய்கிறோம், நிறைய திருத்தம் வரும்.

தமிழ்நாடு கல்வி திட்டம் நாட்டிலில் சிறந்த திட்டம். கொரோனா முன்பு நல்லா இருந்தது. கொரோனா பிறகு இல்லம் தேடி டேட்டா பார்த்தால் வேதனை அளிக்கிறது.

ஆனால் பொதுவாக பிற மாநிலங்களை ஒப்பிட்டு பார்த்தால் தமிழ்நாடு கல்வி நல்லா இருக்கு. இந்த அரசானை மூலம் வருமை கோட்டின் உள் இருப்பவர்களுக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.

முனைவர் பட்டம் அளவிற்கு தமிழ் தேவையில்லை. 10 ஆம் வகுப்பு பாடம் அளவிற்கு பாஸ் மார்க். ஆங்கிலம் வழி படிப்பவர்களுக்கு பாதிப்பு இருக்காது. அவர்களுக்கு உரிமை இருக்கு நீதிமன்றம் செல்வதாக இருந்தால் செல்லட்டும் என தெரிவித்தார்.

அரசு அதிகாரிகளுக்கு பணி வயது வரம்பு 60 ஆக அதிகரிப்பு செய்தது கடந்த அதிமுக ஆட்சியில், அரசு பணியில் வயது வரம்பு குறைப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழர்கள் எல்லா இடங்களிலும் முன்னேறி இருக்கிறார்கள். 8 கோடி பேரில் 9 லட்சம் பேர் தான் அரசு பணியில் உள்ளனர். அரசியல்வாதிகள் எல்லாம் தற்காலிகம், அரசு பணியாளர்கள் நிரந்தரம். இது ரொம்ப முக்கியம்.

யார் தமிழர்கள் என்பது எப்படி சொல்வது. சிலர் 10 ஆண்டுகள் முன்பு இங்கு வந்து தமிழ் படித்திர்பார்கள். அவர்கள் தமிழர்கள் தான். வெறும் பெயர், இருப்பிடம் வைத்து யார் தமிழர்கள் என்று சொல்ல முடியாது.

அரசு தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகள் நடக்காததால், வயது வரம்பு அதிகரிக்கப்படும். எந்த ஒரு தேர்வு முறையும் மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிப்பது அநியாயம். அதற்காக தான் நீட் தேர்வை நாங்கள் எதிர்த்தோம்.

மத்திய அரசின் தேர்வுகளில் மண்டலவாரியாக தேர்வுகள் நடத்தப்படும் போது, தமிழகத்தில் இருந்து 500 முதல் 800 பேர்கள் மத்திய அரசு பணியில் சேர்ந்தனர். தற்போது அதன் எண்ணிக்கை குறைந்துள்ளது. மத்திய அரசிடம் இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு பணிகளிலும் தமிழர்களுக்கு முன்னுரிமைகள் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்போம். மத்திய அரசு பணிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக நமது பங்களிப்பு குறைந்துள்ளது. இதை சரி செய்வோம் என தெரிவித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News