ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஒரே ஒரு வாக்கு மடடும் பெற்ற 7 வேட்பாளர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 73-வது வேட்பாளரான ராஜேந்திரன் என்பவர் ஒரு வாக்கு கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். மொத்தம் 15 சுற்றுகளாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை 9 சுற்றுகள் முடிந்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 70,299 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 45, 314 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 24,985 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 3,830, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 560 வாக்குகளும் பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் 7 வேட்பாளர்கள் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. 73-வது வேட்பாளரான ராஜேந்திரன் என்பவர் ஒரு வாக்கு கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.