ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடத்திய அலுவலர் வீட்டில் ரெய்டு.!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் அதிகாரியாக இருந்த சிவகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.;

Update: 2023-03-21 11:30 GMT

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்ட ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் அதிகாரியாக இருந்த சிவகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 27-ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக தற்போது ஈரோடு மாநகராட்சி ஆணையராக உள்ள சிவகுமார் செயல்பட்டார். 

இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் பல்லாவரம் நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த போது முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் இன்று (மார்ச்.21) செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். ஈரோடு பெரியார் நகரில் உள்ள ஆணையாளர் சிவகுமார் வீட்டில் சோதனை நடைபெற்றது.

இன்று காலை சிவகுமார் வீட்டில் சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வந்தனர். ஆனால் சிவக்குமார் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்ததால் சோதனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து 2 காவலர்களை வீட்டில் காவலுக்காக நிறுத்திவிட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் திரும்பி சென்றிருந்தனர். பின்னர் சிவகுமார் குடும்பத்தினர் வீடு திரும்பினர்.

இதையடுத்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் 5 பேர் கொண்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் வருவாய்துறையை சேர்ந்த 2 அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை முடிந்த பிறகே புகார் குறித்த விவரங்கள் தெரியவரும்.

Tags:    

Similar News