ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 77 வேட்பாளர்கள் போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார்.

Update: 2023-02-10 11:00 GMT

பைல் படம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். அதன்படி களத்தில் 77 வேட்பாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிவேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவக்குமார் வெளியிட்டார்.

அதில், திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பளார் மேனகா, தேமுதிக வேட்பளார் ஆனந்த் மற்றம் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 6 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு:

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு குறித்தும் தேர்தல் நடத்தும் ஆணையர் சிவக்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு கை சின்னம், அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம், சமாஜ்வாதி கட்சிக்கு சைக்கிள் சின்னம், தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. டார்ச் லைட் மற்றும் குக்கர் சின்னங்கள் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி வேட்பாளர், அதிமுக கூட்டணி வேட்பாளர், தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சி என களத்தில் 4 முனை போட்டி நிலவுகிறது.

Tags:    

Similar News