இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு வகுப்புகள்: செப்., 15ல் துவங்க உத்தரவு

'இன்ஜினியரிங் கல்லுாரிகளில் செப்., 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளை துவங்க வேண்டும்.;

Update: 2023-05-18 17:15 GMT

பைல் படம்.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி மாநிலம் முழுவதும் கல்லுாரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை வேகமாக நடந்து வருகிறது. கலை அறிவியல் கல்லுாரிகளில் சேர்க்கை தொடர்பான முழு விவரங்களும் வெளியாகி உள்ள நிலையில், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளிலும் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது.

இந்நிலையில் மாணவர் சேர்க்கை குறித்து, அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான அங்கீகாரம் மற்றும் மாணவர் சேர்க்கை அனுமதியை, ஜூலை 31க்குள் வழங்க வேண்டும். செப்., 10க்குள் முதல் கட்ட மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். செப்.,11ம் தேதி வரை மாணவர்கள் தேர்வு செய்த இடங்களை ரத்து செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

இறுதிக்கட்ட காலியிடங்களுக்கு, செப்., 15க்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும். செப்., 15ல் அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகளை துவங்க வேண்டும். இந்த கால அட்டவணைப்படி, ஒவ்வொரு கல்லுாரியும், மாணவர் சேர்க்கையை முடிக்க திட்டமிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

Tags:    

Similar News