குழந்தைத்தொழிலாளர் முறை அகற்ற ஆட்சியர் தலைமையில் ஊழியர்கள் உறுதி ஏற்பு

பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் ,குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்;

Update: 2023-06-13 08:45 GMT

 குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டஆட்சித்தலைவர் .தீபக் ஜேக்கப் தலைமையில் உறுதி மொழியினை அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டஅரங்கில்  குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர்  .தீபக் ஜேக்கப்  தலைமையில் உறுதி மொழியினை அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றனர்.

குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கானஉறுதிமொழி: “இந்தியஅரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமைஎன்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒரு போதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன்  எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும்,குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றிட சமுதாயத்தில் முற்றிலுமாக விழிப்புணர்வு  ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்”.என்ற உறுதி மொழியினை வாசிக்க அனைத்து அரசு துறை அலுவலர்களும் அதனை பின் தொடர்ந்து வாசித்தனர்.

அதனைத் தொடர்ந்து  மாவட்டஆட்சித் தலைவர்  தீபக் ஜேக்கப்  சமூக பாதுகாப்பு துறை சார்பில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) மரு.என்.ஓ.சுகபுத்ரா ,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  எச்.எஸ்.ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப் புதிட்டம்) தவவளவன், மாவட்டகுழந்தைகள் பாதுகாப்புஅலுவலர் குளோரிகுணசீலி, குழந்தைகள் நலக் குழு தலைவர்  உஷா நந்தினிமற்றும் அரசுஅலுவலர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News