குழந்தை தொழிலாளர் முறை அகற்ற ஆட்சியர் தலைமையில் ஊழியர்கள் உறுதி ஏற்பு

14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன் என உறுதி மொழி ஏற்கப்பட்டது.

Update: 2023-06-13 07:15 GMT

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதி ஏற்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர்  மெர்சி ரம்யா தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்களும்  ஏற்றுக்கொண்டார்கள்.

குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியான, ’இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்” என்ற உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

முன்னதாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர்  மெர்சி ரம்யா  இன்றையதினம் கையெழுத்திட்டு தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  து.தங்கவேல், உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி, புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் துணை ஆய்வாளர் நடராஜன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்  குணசீலன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.



Tags:    

Similar News