அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அண்மையில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
தற்போது அவரது கரூர் வீட்டிலும், சென்னை பட்டினப்பாக்கம் அரசு பங்களாவிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது
சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் எனத் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், சோதனைக்குப்பின் முழு விவரங்கள் தெரியவரும் எனத் தெரிவித்துள்ளார். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
வருமானவரித்துறையினர் முதலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது அமைச்சர் வீட்டிலேயே அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். அதேபோல் அவரது சகோதரர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2016 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்து அதிமுகவின் அமைச்சரவையில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதே புகாரின் பேரில் தான் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர் என கூறப்பட்ட நிலையில், அதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.