திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எங்கே இருக்கிறது என தெரியுமா?

Tiruppur Kumaran Quotes in Tamil-திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எங்கே இருக்கிறது என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

Update: 2022-12-05 13:35 GMT

Tiruppur Kumaran Quotes in Tamil

Tiruppur Kumaran Quotes in Tamil

சுதந்திர போராட்ட காலத்தில் நமது தேசிய கொடியை காப்பதற்காக தனது இன்னுயிரையே கொடுத்தவர் சென்னிமலை.  திருப்பூர் குமரன். கொடி காத்த குமரன் என்றும் இவரை அழைப்பார்கள். திருப்பூர் குமரன் என அழைக்கப்படும் இவர் வாழ்ந்தது தான் திருப்பூர். ஆனால் அவர் பிறந்த ஊர் சென்னிமலை என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சென்னிமலை தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கைநெசவுத் தொழில் இங்கு ஒரு முதன்மையான தொழிலாகும். சென்னிமலை  போர்வை, துண்டு ஆகியவை இந்திய அளவில் பிரசித்தி பெற்றவை ஆகும். விடுதலைப் போராட்ட வீரரான திருப்பூர் குமரன் பிறந்ததும் இவ்வூரேயாகும். இங்கு புகழ்பெற்ற சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. சிறப்பு நிலை பேரூராட்சியாக இருப்பதால், கூடிய விரைவில் நகராட்சி ஆகும் தகுதியும் உள்ளது.

சென்னிமலை பேரூராட்சி, ஈரோட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம் 8 கி.மீ. தொலைவில் உள்ள ஈங்கூர் ஆகும்.இதன் கிழக்கில் அரச்சலூர் 10 கி.மீ.; மேற்கில் ஊத்துக்குளி 18 கி.மீ.; வடக்கில் பெருந்துறை 13 கி.மீ.; தெற்கில் காங்கேயம் 18 கி.மீ. தொலைவில் உள்ளன.4 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 106 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.  2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 4,682 வீடுகளும், 15,500 மக்கள்தொகையும் கொண்டது. சென்னிமலை கடல் மட்டத்திலிருந்து  சராசரியாக 330 மீட்டர் (1082 அடி) உயரத்தில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News