இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.;
இயக்குநர் பாரதிராஜாவுக்கு இன்று காலை ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,
அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டதையடுத்து அவரை சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பாரதிராஜாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
அவர் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.