அதிமுக வேட்பாளருக்கு பூரண கும்பத்துடன் வரவேற்பு
அதிமுக வேடசந்தூர் வேட்பாளர் பரமசிவத்தை பூரண கும்பத்துடன் வரவேற்ற பொதுமக்கள்.;
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் இரண்டாவது முறையாக அதிமுக சார்பில் வேடசந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் பரமசிவம் எம்எல்ஏ. இவர் நேற்று குளத்தூர், கொசவபட்டி, பாடியூர், தென்னம் பட்டி, பாகாநத்தம், கொம்பேறிபட்டி, பிலாத்து ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில்
தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் வேட்பாளர் பரமசிவம் பேசுகையில்- அரசின் சாதனைகளை எடுத்துக்கூறியும், 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதியான நகைக்கடன் ரத்து, குடும்ப அட்டை உள்ள பெண்களுக்கு ரூ.1500, வருடத்திற்கு 6 சிலிண்டர், மாணவர்களுக்கு 2ஜிபி இலவச டேட்டா, அரசு கேபிள் கட்டணம் இலவசம், வீடு இல்லாத அனைவருக்கும் வீடு என இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்காக அறிவித்துள்ளார் என்று கூறி வாக்குகள் சேகரித்தார். உடன் முன்னாள் எம்எல்ஏ தென்னம்பட்டி பழனிச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.