திண்டுக்கல் : டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் உட்பிரிவான தொழிற்சங்க நிர்வாகிகள் திமுகவிற்கு எதிராக போராட்டம் நடத்தினர்

Update: 2022-01-07 09:25 GMT

திண்டுக்கல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டம் 

திண்டுக்கல்லில் திமுக அரசிற்கு எதிராக கூட்டணி கட்சியின் தொழிற்சங்கம் விடியல் அரசு விடியல் அரசே டாஸ்மாக் தொழிலாளர்களின் வாழ்க்கை விடியாமல் போனது என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் டாஸ்மாக் ஊழியருகள் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகள்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும். 19 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வார விடுமுறை,8 மணி நேர வேலை, மிக நேர பணிக்கு ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியருக்கு நிலை ஆணை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தின் நடுவே திமுக அரசிற்கு எதிராக விடியல் அரசே விடியல் அரசே டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்வாதாரம் முடியாமல் போனது என கோஷங்களை  எழுப்பினர்.

திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் உட்பிரிவான தொழிற்சங்க நிர்வாகிகள் திமுகவிற்கு எதிராக விடியல் அரசு என கோஷங்கள் எழுப்பியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது: இதில் மாநில துணைத்தலைவர் ராமு, மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News