கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: தாளாளர் மீது இரண்டு போக்சோ வழக்கு
தலைமறைவாக உள்ள கல்லூரி தாளாளரை கைது செய்ய அமைக்கப்பட்ட ஐந்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்;
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாளாளர் ஜோதி முருகன் மீது இரண்டு போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஜோதிமுருகனை கைது செய்ய ஐந்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் அடுத்துள்ள முத்தனம்பட்டி சுரபி கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொந்தரவு செய்ததாக இதுவரை பாதிக்கப்பட்ட 3 மாணவிகள் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதில் 2 மாணவிகள் 18 வயதுக்கு கீழ் உள்ள அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், தனித்தனியாக போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
இன்று 18 வயது நிரம்பிய மாணவி அளித்த புகாரின் பேரில் ஐபிசி பிரிவு 506/1 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவரை ஜோதி முருகன் கைதுசெய்யப்படவில்லை . மேலும் ஜோதி முருகனை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஜோதி முருகனுடன் தொடர்புடைய நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.