அழகாபுரி குடகனாறு அணை நிரம்பியதால் கூடுதல் தண்ணீர் வெளியேற்றம்
குடகனாறு அணை 1977 ல் ஏற்பட்ட வெள்ளத்தில் உடைந்து உயிர், பொருட்சேதம் ஏற்பட்டது. தற்போது தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அழகாபுரி குடகனாறு அணை நிரம்பியுள்ள நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அழகாபுரி குடகனாறு அணை நிரம்பிய நிலையில், அணைக்கு வரும் கூடுதல் நீர்வரத்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் நேற்று முன்தினம் வரை 22.5 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை மீண்டும் பெய்த கனமழையால், சந்தனவர்த்தினி, மாங்கரை, வரட்டாறு, குடகனாறு மூலம் நேற்று முந்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது.பிறகு அதே கனஅடி தண்ணீர் 3 ஷட்டர்களை திறந்து வெளியேற்றப்பட்டது. இரவு 12 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2,500 கனஅடி நீர் வந்தது. அந்த நீர் அப்படியே குடகனாற்றில் வெளியேற்றப்பட்டது. அதேபோல, கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில், முறையே வினாடிக்கு 100, 20கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டது. குடகனாறு அணை 1977 ல் ஏற்பட்ட வெள்ளத்தில் திடீரென உடைந்து உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டது. அது போன்ற ஒரு நிலை வராமல் தவிர்க்க, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பபில் ஈடுபட்டுள்ளனர்.