குளத்தில் சட்டவிரோதமாக மண் எடுத்த லாரி- ஜேசிபி இயந்திரம் சிறைபிடிப்பு

குளத்தில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீதும் உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை

Update: 2021-12-09 13:00 GMT

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தொகுதியில் குஜிலியம்பாறை அருகே குளத்தில் சட்டவிரோதமாக மண் எடுத்த லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தொகுதியில் குஜிலியம்பாறை அருகே குளத்தில் சட்டவிரோதமாக மண் எடுத்த லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே கருதணம்பட்டி உள்ளது இந்த ஊரின் அருகே உள்ள குளத்தில் திமுக பிரமுகர் சட்டவிரோதமாக இரவு பகலாக மணல்  திருட்டில்  ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

 இந்தநிலையில், இன்று காலையில் அந்தக் குளத்தில் பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அதனைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் திரண்டு சென்று, மணல் திருட்டில் ஈடுபட்ட லாரி மற்றும் ஜேசிபி வாகனத்தை சிறை பிடித்தனர். இதற்கிடையில் வாகன ஓட்டுநர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அதிகாரி மணல் அள்ளி வந்த லாரி மற்றும் ஜேசிபி வாகனத்தை வெளியே அனுப்பி வைத்ததார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், கிராம நிர்வாக அதிகாரியிடம் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் பெயரளவில் கிராம நிர்வாக அதிகாரி, மணல்  அள்ளிய  இடத்தை ஜேசிபி வாகனத்தை வைத்து மூடி விட்டு , வாகனத்தை அனுப்பி வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

தமிழக முதலமைச்சர் பட்டா இடங்களில் மட்டும் மணல் அள்ள வேண்டும் என்று அறிவித்துள்ள பின்னரும், அதையும் மீறி, குளத்தில் சட்டவிரோதமாக  மணல் திருட்டில்  ஈடுபடும் நபர்கள் மீதும், இதற்கு உடந்தையாக செயல்படும் கிராம நிர்வாக அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்கள்  வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News