பட்டம் விடும் பொழுது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவன்
உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை;
வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தற்போது காற்று அதிக அளவு அடிப்பதால் மாணவர்கள் மாலை நேரங்களில் தங்களது வீட்டு மாடியில் பட்டம் விட்டு வருகின்றனர். இந்நிலையில் வேடசந்தூர், எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ராஜா என்பவர் மகன் கவின்குமார் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன், இன்று மாலை அவரது வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சுமார் 50 அடி உயரத்திலிருந்து கவின்குமார் நிலைதடுமாறி தண்ணீர் தொட்டியில் இருந்து கீழே விழுந்துள்ளார் இதில் அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக கவின்குமாரை வேடசந்தூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
தற்போது உள்ள வைரஸ் தொற்று காலகட்டத்தில் பெற்றோர்களும் குழந்தைகளும் வீட்டிலேயே இருக்கிறார்கள். பெற்றோர்கள் வீட்டில் இருக்கும்போது குழந்தைகளை கண்டிப்பாக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இதுபோன்ற துயரச் சம்பவம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.