தமிழக அரசைக் கண்டித்து நிலக்கோட்டையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 142 அடிக்கு தண்ணீர் தேக்காமல் அணையை திறந்துவிட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்;
முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தவறிய தமிழக அரசை கண்டித்து, விடாத மழையிலும் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழகத்திலுள்ள தேனி, திண்டுக்கல், மதுரை உட்பட ஐந்து மாவட்டங்களின் குடிநீர் உட்பட ஜீவாதார பாசன வசதி பெறும், முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 142-அடி அளவு தண்ணீர் தேக்கி வைக்காமல் தன்னிச்சையாக அணையை திறந்துவிட்ட கேரள அரசைக் கண்டித்தும், அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தவறிய தமிழக அரசை கண்டித்தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழிசேக,ர் ஒன்றிய செயலாளர்கள் யாகப்பன் நல்லதம்பி உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் மழையில் நனைந்து கொண்டும் குடைபிடித்துக்கொண்டும் தமிழக கேரள அரசிற்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
ஆர்பாட்டத்தில் நத்தம் விசுவநாதன் பேசியதாவது: நிலக்கோட்டை பகுதியில் உள்ள விளாம்பட்டி, இராமராஜபுரம், மட்டப்பாறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 100-க்கனக்கான டன் நெல் குவிக்கப்பட்டு அரசின் மெத்தன போக்கால் முளைக்க துவங்கியுள்ளது. உணவுத் துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சரும் சொந்த மாவட்டத்திலே இந்த நிலை எனவும் இந்த ஆர்ப்பாட்ட தமிழக அரசு செவி சாய்க்காதபட்சத்தில் அதிமுக தலைமைகழக பொறுப்பாளர்களிடம் ஆலோசனை செய்து மிகப் பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர்.