மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்
திண்டுக்கல் பி.ஆர்.என்.பி பள்ளியில் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நிகழ்ச்சியில் நடிகர் தாமு கலந்து கொண்டு பேசினார்.;
திண்டுக்கல் மா.மு. கோவிலூர் சாலையில் உள்ள பி ஆர் என் பி பள்ளியில் ஆசிரியர் மாணவர் சங்கமம் தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆசிரியை லட்சுமி வரவேற்புரையாற்றினார். பள்ளி நிர்வாக இயக்குனர் சந்திரமோகன் முதல்வர் கலைச்செல்வி கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாணவர்களுக்கு கற்றலின் அவசியம், ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் செய்ய வேண்டிய கடமையைப் பற்றி விவரித்தார். தற்போதைய காலகட்டத்தில் கல்வி குறித்த விஷயங்களை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விளக்கமளித்தார். ஆசிரியை சித்ரா நன்றி கூறினார்.