பழனி நகராட்சியில் கொசுஒழிப்பு பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

பழனி நகராட்சி அலுவலகத்தில், தற்காலிகமாக பணியாற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், வேலையை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-12-11 05:22 GMT

பழனி நகராட்சி அலுவலகத்தில், வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள்.

பழனி நகராட்சி சார்பில்,  தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில், 66 பேர் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பணியாளர்கள்,  நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று, டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு, கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வாங்கவில்லை எனக்கூறி பழைய நகராட்சி அலுவலகம் முன்பு, இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதியம் வழங்க வேண்டும் இல்லையெனில்  பணிக்குச் செல்ல மாட்டோம் என்று கூறி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் இறங்கினர்.

தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தனியார் நிறுவனம் மூலம் தங்களுக்கு வரவேண்டிய மூன்று மாத சம்பள தொகையை பெற்றுத் தருகிறோம் என உறுதி அளித்ததை தொடர்ந்து,  மீண்டும் பணியாளர்களை பணிக்கு சென்றனர்.

Tags:    

Similar News