தொடர்மழை எதிரொலி - கொடைக்கானல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
தொடர்மழை காரணமாக, கொடைக்கானல் பகுதியில் உள்ள அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.;
வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியின் காரணமாக, தமிழகத்தின் ஒருசில மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது..இதன் எதிரொலியாக, திண்டுக்கல் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
கொடைக்கானல் சுற்று வட்டாரப்பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அருவிகளிலும் நீர் வரத்து அதிகரிகரித்து, ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
வட்டக்கானல் நீர்வீழ்ச்சி,பாம்பார் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டினலும் அதை ரசிக்க, யாரும் இல்லாமல் அப்பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர் மழையால், கொடைக்கானலில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.