கொடைக்கானலில் பட்டப்பகலில் பெண்ணிடம் செல்போன், பணம் பறித்த இருவர் கைது
கொடைக்கானல் பகுதியில் பட்டப்பகலில் பெண்ணிடம் செல்போன், பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.;
திண்டுக்கல் மாவட்டம், பழனி தொகுதி கொடைக்கானல் ஏரிச்சாலையில் பட்டப்பகலில் வடமாநில பெண்ணிடம் செல்போன், பணம் பறித்த செண்பகனூர் பகுதியை சேர்ந்த திலீப்குமார் (21), கோபாலகிருஷ்ணன் (21) ஆகிய 2 வாலிபர்களை மோட்டார் சைக்கிளுடன் கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.
மேலும் கைப்பையில் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.2 ஆயிரத்து 500 ஆகியவை கைப்பற்றப்பட்டு வடமாநில பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இது குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை செய்கிறார்கள்.