அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து, நாளை சண்முகர் -வள்ளி, தெய்வயானைக்கு திருக்கல்யாணம் வைபவத்துடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவடைகிறது

Update: 2021-11-09 14:45 GMT

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

பழனியில் இன்று சூரசம்ஹார நிதழ்ச்சி கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பல்வேறு  கட்டுப்பாடுகளுடன்  நடைபெற்றது. கடந்த 4ம்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கிய கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது.  மலைக்கோயிலில் இருந்து முருகப் பெருமான், மலைக்கொழுந்து அம்மனிடம் இருந்து சக்திவேல் வாங்கி வந்தார். தொடர்ந்து வீரபாகு, நவவீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் படை சூழ வடக்கு கிரிவீதியில் தாராகா சூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபனையும் ,

தெற்கு கிரிவீதியில் சிங்கமுகா சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும் சின்னக்குமாரர்  சக்திவேல் கொண்டு வதம் செய்தார். சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் உள்ளூரை நூற்றுக்கணக்கான பக்தர்கள்  சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சூரசம்ஹாரம் செய்து இன்று அசுரர்களை வென்றதை தொடர்ந்து, நாளை சண்முகர் -வள்ளி, தெய்வயானைக்கு திருக்கல்யாணம் வைபவத்துடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவடைகிறது.  திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் பக்தர்களுக்கு அனுமதி இவ்லை என்று திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கந்தசஷ்டி விழாவையொட்டி பழனியில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விசாகன், மாவட்ட எஸ்.பி.சீனிவாசன், கோயில் இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள்‌ கலந்து  கொண்டனர்.

Tags:    

Similar News