பழனி அரசு மருத்துவமனையில் சிறப்பு யோகாசன இலவச பயிற்சி முகாம்
பழனி அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு யோகாசன இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.;

பழனி அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு யோகாசன இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.
பழனி அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு யோகாசன இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மற்றும் சித்தர் யோகா சேவா அறக்கட்டளை, சிவாலயா யோகா மையம் ஆகியவை இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
பழனி புலிப்பாணி சித்தர் ஆசிரமத்தில் நடைபெற்ற முகாமில் அரசு சித்த மருத்துவர் மகேந்திரன் சர்க்கரை மற்றும் தோல் நோய் சிறப்பு மருத்துவர் பன்னீர்செல்வம் சிறப்பு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
சிவாலயா யோகாசன பள்ளி ஆசிரியர் சிவக்குமார் சிறப்பு யோகாசன பயிற்சிகள் வழங்கினார். இந்த முகாமில் சர்க்கரை நோயாளிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆலோசனைகள் பெற்றனர்.