குடியிருப்பு பகுதிக்கு வரும் ஒற்றை காட்டு யானை பழனி அருகே பொது மக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்
பழனி அருகே குடியிருப்பு பகுதிக்கு வரும் ஒற்றை காட்டு யானையால் பொது மக்கள் , வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.;

பழனி அருகே இரவில் குடியிருப்பு பகுதிக்கு வரும் ஒற்றை காட்டு யானையால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
பழனி:
பழனி அருகே மலையடிவார குடியிருப்பு பகுதிக்கு வரும் ஒற்றை காட்டு யானையால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் வரதமாநதி அணை, தேக்கந்தோட்டம், புளியமரத்துசெட ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. மலையடிவாரத்தை ஒட்டியுள்ள இந்த பகுதிகளில் யானை, மான், குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி தோட்ட பகுதிகளுக்குள் புகுவது வழக்கம். ஆகவே, வனவிலங்கு-மனித மோதல், வனவிலங்கு வேட்டை ஆகியவற்றை தடுக்க பழனி வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யானைகள் உலவும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லவும் அறிவுறுத்துகின்றனர்.
இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்கியது முதலே அவ்வப்போது மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் செடிகள், மரங்கள் நன்கு வளர்ந்துள்ளன. மேலும் நீரோடைகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் போதிய உணவு, நீர் உள்ளதால் வனவிலங்குகள் மலையடிவார பகுதிகளுக்குள் வருவது குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வரதமாநதி அணை பகுதி அருகே கொடைக்கானல் சாலையில் ஒற்றையானை ஒன்று உலா வருகிறது. இரவு நேரம் உலா வரும் யானை சாலையில் நீண்ட நேரம் நிற்கிறது. இதனால் அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அதேபோல் அருகில் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
ஒரு சில இளைஞர்கள் ஒற்றை யானையை அதிக சத்தமிட்டு விரட்ட முயல்கின்றனர். அப்போது அது ஆக்ரோஷத்துடன் பிர் இட்ட படி செல்கிறது. எனவே சாலை பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையை விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையடிவார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.